TNPSC Thervupettagam

ஐசிஎஃப் -கரியமில வாயு

March 21 , 2018 2311 days 753 0
  • சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி, புவி வெப்பமயமாதலுக்கு மூலகாரணமாக இருக்கும் கரியமிலவாயு (கார்பனை) வெளியேற்றத்தை முற்றிலும் குறைத்து, சென்னை ஐசிஎஃப் (Integral Coach Factory – ICF) நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
  • தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவில் வெளியேற்றப்படும் கார்பனால், புவி வெப்பமடைந்து பருவநிலையில் மாறுபாடு ஏற்படுகிறது.
  • பொதுத்துறை நிறுவனமான சென்னை ஐசிஎஃப், கார்பனை வெளியேற்றும் அளவை முற்றிலும் குறைத்துள்ளது.
  • ஐசிஎஃப் நிறுவனத்துக்குத் தேவைப்படும் மின்சாரம் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படுகிறது
  • அதாவது 5 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலை மூலமும், 2.4 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலமும் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
  • மேலும் அலுவலகம், வளாகத்துக்குத் தேவையான மின்விளக்குகள் LED விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளன.
  • இத்துடன், தொழில் நிறுவனத்துக்கு பயன்படுத்தும் எண்ணெய் (லூப்ரிகேஷன்) பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.
  • இதனால் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கார்பனின் அளவு மிகவும் குறைந்துள்ளது.
  • அத்துடன் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுவதால் அதிக அளவிலான மாசு மற்றும் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
  • இவற்றின் பயனாக, நாட்டிலேயே ரயில்வேத் துறையில் முதன்முறையாக, சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் நிறுவனம் கார்பனை முற்றிலும் குறைத்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்