ஐசிஐசிஐ புரூடென்சியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது ஐ.நா.வின் ஆதரவு பெற்ற பொறுப்பு மிக்க முதலீட்டுக் கொள்கைகளில் கையெழுத்திட்ட முதலாவது இந்தியக் காப்பீட்டு நிறுவனமாகும்.
இது சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகைப் பிரச்சினைகளுக்காக வேண்டி உறுதிப் பாட்டினை வெளிப்படுத்துவதற்கானதாகும்.
நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக IPRULIFE நிறுவனமானது தனது முதலீட்டு மேலாண்மைக் கட்டமைப்பில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை காரணிகளை ஒருங்கிணைக்கிறது.
UNPRI என்பது ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நிதி முன்னெடுப்பு மற்றும் ஐ.நா. உலக ஒப்பந்தம் போன்ற ஐக்கிய நாடுகளின் இரு அமைப்புகளுடன் இணைந்து மேற் கொள்ளப் படும் ஒரு முதலீட்டாளர் முன்னெடுப்பாகும்.