ஐசிஐசிஐ, ஸ்டான்சார்ட் மற்றும் HSBC - ‘பரிமாற்று வணிக ஒப்பந்தம்’
August 22 , 2021 1192 days 546 0
ஐசிஐசிஐ வங்கியானது HSBC மற்றும் ஸ்டாண்டர்டு சார்டர்டு வங்கி ஆகிய வங்கிகளுடனான இந்தியாவின் முதலாவது பரிமாற்று வணிக ஒப்பந்தத்தினை (Swaption) துவங்கியுள்ளது.
உள்நாட்டு கடன் சொத்துக்களுள் மேலும் அதிக வெளிநாட்டு நிதிகளை ஈர்ப்பதற்கு, உலகத் தரம் வாய்ந்த தீர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ள நாட்டின் வட்டி விகித கொணர்வுச் சந்தைகளில் இடர் மேலாண்மைக்கான ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க இது வழிவகுக்கிறது.
‘பரிமாற்று வணிக’ வட்டி விகித கொணர்வுச் சந்தை முறையானது உள்நாட்டு கடன்வாங்கு நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உயர்ந்து வரும் விகித சூழ்நிலையில் நிதிச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வீழ்ச்சியுறும் சூழ்நிலையில் முதலீட்டு வருமானத்தைத் தக்க வைக்கவும் உதவ வேண்டும்.
இந்திய ரிசர்வ வங்கியானது 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் பரிமாற்று வணிக முறை ஒப்பந்தம் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது.