TNPSC Thervupettagam
September 24 , 2020 1403 days 673 0
  • நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான 2020 ஆம் ஆண்டின் ஐஜி நோபல் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களை விட அரசியல் தலைவர்களே இறப்பு மற்றும் வாழ்க்கை மீதான உடனடித் தாக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று உலகிற்குக் காண்பிப்பதற்காக இந்தப் புகழ்பெற்ற விருதினை அவர் பெற்றுள்ளார்.
  • பிரதமர் மோடி அவர்கள் பிரேசிலின் ஜெயிர் போல்சனரோ, ஐக்கிய இராஜ்ஜியத்தின் போரிஸ் ஜான்சன், மெக்சிகோவின் ஆண்டிரிஸ் மானுவேல் லோப்பெஸ் ஓப்ரடோர், பெலாரஸின் அலெக்சாந்தர் லூகாசென்கோ, அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப், துருக்கியின் ரெசப் தயீப் எர்டோகன், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் துர்க்மெனிஸ்தானின் குர்பாங்குலி பெர்டிமுகாமெடோ ஆகியோருடன் விருதைப் பகிர்ந்துள்ளார்.
  • இதனைத் தவிர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் கூட்டாக 2020 ஆம் ஆண்டின் ஐஜி நோபல் அமைதிப் பரிசை வென்றுள்ளன.
  • இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட 2வது இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
  • இதற்கு முன் இந்த விருதானது 1998 ஆம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • இது பாகிஸ்தானின் அப்போதைய பிரதமரான நவாஸ் செரிப்புடன் பகிர்ந்து கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்