ஐடிபிஐ வங்கி மீதான உடனடி சரிபார்ப்பு நடவடிக்கை (PCA) கட்டுப்பாடுகள் நீக்கம் – RBI
March 14 , 2021 1354 days 524 0
இந்திய ரிசர்வ் வங்கியானது RBI தனது மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை மேற்பார்வை அல்லது PCA கட்டமைப்பிலிருந்து ஐடிபிஐ வங்கியை நீக்கியுள்ளது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவுடையும் காலாண்டிற்கான வெளியிடப் பட்டுள்ள முடிவுகளின்படி, இந்த வங்கியானது ஒழுங்குமுறை மூலதனம், நிகர வாராக் கடன், அந்நிய கடன் விகிதம் குறித்த PCA கூறுகளை மீறவில்லை.
ஐடிபிஐ ஆனது வலுவற்ற நிதி நெருக்கடியின் காரணமாக 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் PCA கட்டமைப்பின் கீழ் வைக்கப்பட்டது.
PCA என்பது வலுவற்ற நிதித் தன்மை மற்றும் சரியாக மேலாண்மை செய்யப்படாத வங்கிகள் ஆகியவை RBI வங்கியின் கீழ் கண்காணிப்பில் வைக்கப்படும் ஒரு கட்டமைப்பாகும்.