TNPSC Thervupettagam

ஐடேட் ஆணைய அறிக்கை

January 30 , 2024 172 days 204 0
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஆனது பிகு ராம்ஜி ஐடேட் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளது.
  • ஐடேட் ஆணையம் ஆனது, தனது அறிக்கையை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சமர்ப்பித்தது.
  • இந்தியாவில் நாடோடியாக உள்ள பழங்குடியினர், பகுதியளவு நாடோடியாக உள்ள பழங்குடியினர் மற்றும் சீர் மரபினருக்கான (NTs, SNTs மற்றும் DNTs) ஒரு நிரந்தர ஆணையத்தினை அமைப்பதற்கு இக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • 2008 ஆம் ஆண்டின் ரென்கே ஆணையத்தின் அறிக்கையானது, அவர்களின் மக்கள் தொகை 10-12 கோடிக்கு இடையில் இருக்கும் என்று தோராயமாக மதிப்பிட்டுள்ளது.
  • ஆனால் அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
  • 1952 ஆம் ஆண்டு தொடர் குற்றவாளிகள் சட்டத்தினை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில், அந்தச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள படி ஒரு முதன்மை அதிகாரியின் இடத்தில், சீர் மரபினப் பழங்குடி சமூகத்தினருக்கான ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் கூறியது.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்/இதரப் பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் கீழ், சீர் மரபின பழங்குடியினர்/நாடோடியாக உள்ள பழங்குடியினர் /பகுதியளவு நாடோடியாக உள்ள பழங்குடியினர் சேர்க்கப்படாதது மற்றும் இதரப் பிரிவுகளுடன் மேற்கூறியப் பிரிவினருக்குமாக என்று பிரத்தியேக கொள்கைகளை உருவாக்குவது குறித்தும் அந்த ஆணையம் பரிந்துரைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்