ஐநா அமைதிப்படை அமைச்சர்கள் கூட்டம் 2023
December 7 , 2023
354 days
244
- இது கானாவின் அக்ராவில் நடைபெறுவதாக இருந்தது.
- இதில் 85 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்டன.
- இது ஐக்கிய நாடுகள் சபையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கூட்டம் ஆகும்.
- இதில் இந்தியப் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கலந்து கொண்டார்.
- ஒவ்வொரு அமைதிப்படை திட்டமும் ஐ.நா பாதுகாப்புக் குழுமத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
- இது 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- ஐநா உறுப்பு நாடுகள் அமைதிப் படைகளுக்குத் தன்னார்வ அடிப்படையில் தங்கள் வீரர்களைப் பங்களிக்கின்றன.
- ஐநா அமைதிப் படை நடவடிக்கைகளின் நிதி ஆதாரங்கள் ஐநா உறுப்பு நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும்.
- கடந்த 70 ஆண்டுகளில், இந்தியா 53 வெவ்வேறு பணிகளில் 2,75,000க்கும் மேற்பட்ட துருப்புக்களை வழங்கியுள்ளது.
- 2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்குப் பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
- இந்திய ராணுவம் புதுதில்லியில் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை மையத்தை (CUNPK) நிறுவியுள்ளது.
- 2021 ஆம் ஆண்டில், இந்தியா ஐநாவுடன் இணைந்து UNITE AWARE எனும் தளத்தை அறிமுகப் படுத்தியது.
Post Views:
244