TNPSC Thervupettagam

ஐநா அமைதிப்படை அமைச்சர்கள் கூட்டம் 2023

December 7 , 2023 226 days 179 0
  • இது கானாவின் அக்ராவில் நடைபெறுவதாக இருந்தது.
  • இதில் 85 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்டன.
  • இது ஐக்கிய நாடுகள் சபையால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கூட்டம் ஆகும்.
  • இதில் இந்தியப் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கலந்து கொண்டார்.
  • ஒவ்வொரு அமைதிப்படை திட்டமும் ஐ.நா பாதுகாப்புக் குழுமத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • இது 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • ஐநா உறுப்பு நாடுகள் அமைதிப் படைகளுக்குத் தன்னார்வ அடிப்படையில் தங்கள் வீரர்களைப்  பங்களிக்கின்றன.
  • ஐநா அமைதிப் படை நடவடிக்கைகளின் நிதி ஆதாரங்கள் ஐநா உறுப்பு நாடுகளின் கூட்டுப் பொறுப்பாகும்.
  • கடந்த 70 ஆண்டுகளில், இந்தியா 53 வெவ்வேறு பணிகளில் 2,75,000க்கும் மேற்பட்ட துருப்புக்களை வழங்கியுள்ளது.
  • 2007 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்குப் பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
  • இந்திய ராணுவம் புதுதில்லியில் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படை மையத்தை (CUNPK) நிறுவியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், இந்தியா ஐநாவுடன் இணைந்து UNITE AWARE எனும் தளத்தை அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்