TNPSC Thervupettagam

ஐநா சாலை பாதுகாப்பு அறக்கட்டளை நிதியம்

April 26 , 2018 2308 days 709 0
  • உலகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், சாலை விபத்துகளை குறைப்பதற்காகவும், சாலை விபத்துகளால் உண்டாகும் இறப்புகளை குறைத்து உயிர்களைக் காப்பதற்காகவும் ஐநா அவையானது ஐநா சாலை பாதுகாப்பு அறக்கட்டளை நிதியத்தை (UN Road Safety Trust Fund) தொடங்கியுள்ளது.
  • சாலை பாதுகாப்பு மீதான தீர்மானத்தை ஐநா பொது அவை (UN General Assembly -UNGA) அண்மையில் ஏற்றுக் கொண்டது..
  • ஐ.நாவின் ஐரோப்பாவிற்கான பொருளாதாரக் குழுவானது (UN Economic Commission for Europe-UNECE) ஐநா சாலை பாதுகாப்பு அறக்கட்டளை நிதியத்தின் செயலகமாகும் (secretariat) .
  • சாலை பாதுகாப்பிற்கான பத்தாண்டு (2011 – 20) செயல்பாடுகளுக்கான உலகளாவிய திட்டத்தின் {Global Plan for Decade of Action for Road Safety (2011-20)} ஐந்து தூண்களோடு இணைந்து சாலை பாதுகாப்பிற்கான பிற முயற்சிகளுக்கு இந்நிதியம் ஆதரவு வழங்கும்.
  • அவையாவன
    • மேம்படுத்தப்பட்ட விபத்துக்குப் பின்னான சிகிச்சை
    • சாலை பயன்பாட்டாளர்களின் மேம்பட்ட மனப்போக்கு
    • வாகனங்களின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள்
    • சாலை உள்கட்டமைப்புகளின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் பரந்த போக்குவரத்து நெட்வோர்க் அமைப்புகள்
    • வலுப்படுத்தப்பட்ட சாலைப் பாதுகாப்பு மேலாண்மை திறன்கள்
  • அனைத்து நிலைகளிலும் திறம்பட்ட சாலை பாதுகாப்பு செயல்பாடுகளுக்காக மூல ஆதாரங்களின் திரட்டல்களில் உள்ள இடைவெளியை நீக்குவதன் மூலம் உலக சாலை பாதுகாப்பை அதிகரிப்பதில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதே இந்நிதியத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்