ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உச்சி மாநாடு ஆனது இரசாயனங்கள் மற்றும் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைப்பதற்கான ஒரு புதிய உலகளாவிய கட்டமைப்பை ஏற்றுள்ளது.
ஐந்தாவது சர்வதேச இரசாயன மேலாண்மை மாநாட்டில் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனங்களைப் படிப்படியாக அகற்றுவதற்கு உலக நாடுகள் உறுதி பூண்டு உள்ளன.
இரசாயனங்கள் மீதான உலகளாவிய கட்டமைப்பு ஆனது, இரசாயனங்களின் ஆயுள் சுழற்சி முழுவத்திற்குமான உறுதியான இலக்குகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமைக்கிறது.
இந்த கட்டமைப்பானது ரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் மீது மிகவும் பொறுப்பான மேலாண்மையினை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள 28 இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் இரசாயன மாசுபாட்டைக் குறைப்பதற்கும் பாதுகாப்பான மாற்று வழிகளை ஊக்குவிப்பதற்குமான கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வகுக்க உள்ளதாக உலக நாடுகளின் அரசாங்கங்கள் உறுதிபூண்டுள்ளன.
தொழிற்சாலைகளும், மாசு மற்றும் அதன் பாதகமான தாக்கங்களைக் குறைக்கச் செய்வதற்காக இரசாயனங்களை மேலாண்மை செய்வதற்கு உறுதியளித்தன.
2035 ஆம் ஆண்டிற்குள் தீங்கு விளைவிக்கும் வகையிலான வேளாண் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டினை படிப்படியாக ஒழிப்பதே இந்தக் கட்டமைப்பின் நோக்கமாகும்.