சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி C.T. செல்வம் தலைமையிலான ஐந்தாவது காவல் துறை ஆணையமானது தனது இறுதி அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.
காவல்துறையில் ஆட்சேர்ப்பு நிலை முதல் ஓய்வு பெறும் நிலை வரையில் காவல் துறையின் பல்வேறு சிறப்பு அம்சங்கள் குறித்த ஒரு ஆய்வினை உள்ளடக்கிய இந்த அறிக்கையானது தமிழ்நாடு காவல்துறையில் பெரும் சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்துள்ளது.
காவல்துறை மற்றும் பொதுமக்களின் உறவை வலுப்படுத்துவதற்காக அவர்களின் பரஸ்பர நலன்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகள் இதில் அடங்கும்.
தமிழக காவல்துறையில் சுமார் 1.3 லட்சம் பணியாளர்கள் உள்ளனர்.