இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், இரண்டு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார், மேலும் மூன்று பேரை இடம் மாற்றி, ஐந்து மாநிலங்களின் ஆளுநர் பதவிகளை மறுசீரமைத்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக உள்ள அனுசுயா உய்கேக்கு பதிலாக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகமது கான், பீகாருக்குப் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
மிசோரம் மாநில ஆளுநராக இருந்த ஹரி பாபு கம்பம்பட்டி ஒடிசா மாநிலத்திற்கு மாற்றப் பட்டுள்ளார்.
ஜெனரல் (டாக்டர்) விஜய் குமார் சிங், தற்போது மிசோரம் மாநில ஆளுநராகப் பணியாற்ற உள்ளார்.
பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்த இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரள மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.