ஐரோப்பாவின் ஏரியன்-6 எனப்படும் மிகப்பெரிய புதியதொரு ஏவுகலமானது தனது முதல் விண்கலத் திட்டமாகப் பிரெஞ்சு கயானாவின் கௌரு என்ற இடத்தில் இருந்து விண்ணில் ஏவப் பட்டுள்ளது.
ஏரியன்-6 ஆனது அதன் முன்னோடி ஏவுகலமான ஏரியன்-5 ஏவுகலத்திற்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது புவித் தாழ் மட்டச் சுற்றுப்பாதை மற்றும் விண்வெளியின் மிகவும் தொலைதூரப் பகுதிகளுக்கு ஆய்வுக் கலங்களை அனுப்பும் திறன் கொண்டது.