ஐரோப்பாவில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள மகரந்தச் சேர்க்கை இனங்களுக்கான IUCN அமைப்பின் விரிவான வளங்காப்பு செயல் திட்டங்கள்
December 3 , 2023 362 days 226 0
2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) ஆனது, IUCN இனங்கள் உயிர்வாழ்தல் ஆணையம், முதுகெலும்பி சாரா உயிரினங்கள் பாதுகாப்புக் குழு, வட்டமிடும் ஈக்கள் (ஹோவர்ஃபிளை) இன நிபுணர் குழு மற்றும் பக்லைஃப் அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள மகரந்தச் சேர்க்கை இனங்களின் வளங்காப்புத் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளைக் கோடிட்டுக் காட்டும் மூன்று செயல் திட்டங்களை இறுதி செய்துள்ளது.
இந்த செயல் திட்டங்கள் ஆனது, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி பெறும் திட்டத்தின் கட்டமைப்பிற்குள் உருவாக்கப் பட்டன.
“லாரல் வன மண்டலத்தின் கேனரியன் தீவுகளைச் சேர்ந்த மகரந்தச் சேர்க்கை இனங்கள் – வளங்காப்புத் திட்டம் 2023-2028” என்ற ஆரம்பச் செயல் திட்டம் ஆனது, பண்டைய லாரல் வன வாழ்விடத்தில் வாழ்கின்ற நான்கு பூச்சி இனங்கள் – இரண்டு பட்டாம்பூச்சிகள், ஒரு தேனீ மற்றும் ஒரு ஹோவர்ஃபிளை – மீது கவனம் செலுத்துகிறது.
“ஐரோப்பாவில் உள்ள டீசல் செடிகளை சார்ந்த தேனீக்கள் – வளங்காப்பு செயல் திட்டம் 2023-2030” என்ற இரண்டாவது செயல் திட்டம் ஆனது டீசல் செடிகளைச் சார்ந்த காட்டு தேனீக்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
இறுதிச் செயல்திட்டம் ஆனது முதுமையான மரங்கள் மற்றும் ஈரமான, சிதையும் மரங்களைச் சார்ந்துள்ள ஆறு ஹோவர்ஃபிளை இனங்கள் மீது கவனம் செலுத்துகிறது.
இந்த சப்ராக்ஸிலிக் பூச்சிகள், முக்கிய மகரந்தச் சேர்க்கை இனங்களாகவும், ஊட்டச் சத்து மறுசுழற்சி, பூச்சிக்கொல்லி மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் குறிகாட்டிகளாகவும் செயல்படுகின்றன.
“ஐரோப்பாவில் உள்ள முதுமையான மரங்களைச் சார்ந்த ஹோவர்ஃபிளை இனங்கள் – வளங்காப்பு செயல் திட்டம் 2023-2030”, சிதைவுற்ற மரம் மற்றும் பழங்கால மரங்களைச் சார்ந்திருக்கும் மகரந்தச் சேர்க்கை பூச்சி இனங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு வனவியல் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வெகுவாக வலியுறுத்துகிறது.