சமீபத்தில் வடக்கு ஸ்பெயினில் ஒரு தாடை எலும்புத் துண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் இன்று வரையில்கண்டுபிடிக்கப்பட்ட மனித மூதாதையரின் ஒரு மிகப் பழமையான புதைபடிவமாக இது இருக்கலாம்.
அடாபுர்கா மலைத்தொடரில் உள்ள தொல்பொருள் ஆய்வுத் தளத்தில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த புதைபடிவம் சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும்.
தற்போது வரையில், ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான மனித உடலின் புதைபடிவமானது 2007 ஆம் ஆண்டில் இதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்ட தாடை எலும்பு ஆகும்.
இது 1.2 மில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையானது என தீர்மானிக்கப்பட்டது.