TNPSC Thervupettagam

ஐரோப்பாவில் நிலவும் மோசமான வறட்சி நிலை

August 28 , 2022 695 days 333 0
  • 1540 ஆம் ஆண்டிலிருந்து  இதுவரையில் ஒரு ஐரோப்பியக் கோடை இவ்வளவு வறண்ட நிலையில் இருந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது.
  • 1540 ஆம் ஆண்டில் ஓராண்டுக் கால வறட்சியானது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பலி வாங்கியது.
  • உலகளாவிய வறட்சி ஆய்வகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ஐரோப்பாவின் 47% நாடுகள் தற்போது "எச்சரிக்கை" நிலையில் உள்ளன.
  • மேலும், ஐரோப்பாவின் 17% பகுதிகளின் தாவரப் பரவல் "நெருக்கடி நிலையின் அறிகுறிகளை" காட்டுகின்றன.
  • தற்போது நிலவும் இந்த வறட்சியானது குறைந்தபட்சம் கடந்த 500 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வறட்சி என்று முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.
  • உலகளாவிய வறட்சி ஆய்வகமானது ஐரோப்பிய ஆணையத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்