ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைவதற்கான ஒரு விண்ணப்பத்தினை கொசோவோ அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் உரிமைக்கு விண்ணப்பித்த கடைசி மேற்கத்திய பால்கன் நாடு கொசோவோ ஆகும்.
கொசோவோ 2008 ஆம் ஆண்டில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்த அல்பேனிய இனம் சார்ந்த ஒரு பிரதேசமாகும்.
ஆனால் செர்பியா நாடானது தனது முக்கிய நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றுடன் சேர்ந்து செர்பியாவினை இன்னும் தனது எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியாகவே கருதுகிறது.
எனவே, கொசோவோ ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இடம் பெறவில்லை.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளான கிரீஸ், ஸ்பெயின், ரோமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் சைப்ரஸ் ஆகிய ஐந்து நாடுகளும் கொசோவோ நாட்டினை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கவில்லை.