ஐரோப்பிய ஒன்றியம் (EU) –PESCO (Permanent Structured Cooperation)
November 14 , 2017 2596 days 873 0
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த இருபத்தி மூன்று உறுப்பு நாடுகள் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பிற்காக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
நிரந்தரமாக கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பு அல்லது பெஸ்கோ (PESCO- Permanent Structured Cooperation) என்று அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையானது, அதன் ஒப்பந்ததாரர்களை கூட்டு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் சட்டப்பூர்வமாக பிணைக்கிறது.
இந்த பெஸ்கோ (PESCO) உடன்படிக்கையானது, நேட்டோ (NATO) வின் 5-ஆம் விதியில் உள்ளடங்கியிருக்கும் கூட்டு பாதுகாப்பு அளவின் கீழ் கையெழுத்திட்ட ஐரோப்பிய நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நோக்கத்தை கொண்டுள்ளது.
இந்த உடன்படிக்கையில் பிரிட்டன், டென்மார்க், அயர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் மால்டாவைத் தவிர அனைத்து ஐரோப்பிய அரசுகளும் கையெழுத்திட்டுள்ளன.