TNPSC Thervupettagam

ஐரோப்பிய காற்று அளவு செயற்கைக்கோள்

August 25 , 2018 2156 days 648 0
  • கிரேக்க புராணங்களில் காற்றின் பாதுகாவலரின் பெயரான ‘ஏயலஸ்’ எனப் பெயரிடப்பட்ட செயற்கைக்கோளானது ஐரோப்பாவால் பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏவப்பட்டது.
  • இந்த செயற்கைக் கோளானது பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் கீழ்மட்ட 30 கி.மீ. அளவில் காற்றை அளவிடும்.
  • மேம்பட்ட லேசர் அமைப்பான ‘டாப்ளர் காற்று லைடார்’ (Doppler wind lidar) என்ற ஒற்றைக் கருவி இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது.
  • இது சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA – European Space Agency) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘கோபர் நிக்கஸ் திட்டத்தின்‘ ஒரு பகுதியாகும்.
  • இது ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்திற்கான ஏரியன் ஸ்பேஸின் 50வது ஏவுதல் ஆகும்.
  • ஏயலஸ் ஆனது ESA-வின் திட்டமிட்ட 5வது புவி ஆய்வுப் பயணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்