TNPSC Thervupettagam

ஐரோப்பிய பசுமை ஒப்பந்தம்

January 21 , 2023 678 days 337 0
  • ஐரோப்பிய ஆணையமானது, பசுமை ஒப்பந்தத் தொழில்துறைத் திட்டத்தினை அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டமானது உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு மற்றும் அமெரிக்காவின் பணவீக்கக் குறைப்புச் சட்டம் (IRA) போன்ற பிற உலகளாவியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த சட்டப்பூர்வ உறுதிப்பாடுகளின் பிரதிபலிப்பாகும்.
  • முதல் கட்டமாக நிகர-சுழிய உமிழ்வு தொழில்துறைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, தூய்மையான தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் தயாரிப்புச் செயல்முறைக்கான முதலீடு மற்றும் நிதியுதவி அதிகரிக்கப்பட உள்ளது.
  • பசுமை ஒப்பந்தத் தொழில்துறை திட்டம் அறிமுகப்படுத்தல், ஐரோப்பிய சூரியசக்தி உற்பத்தியாளர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்