ஐரோப்பிய யூனியன் திரைப்படத் திருவிழாவின் (European Union Film Festival-EUFF) 23-வது பதிப்பு புதுதில்லியில் உள்ள சிரி கோட்டை கலையரங்கத்தில் அரங்கேற உள்ளது.
இந்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் (Ministry of Information and Broadcasting) திரைப்படத் திருவிழா இயக்குனரகத்தால் (Directorate of Film Festivals) இந்த ஐரோப்பிய யூனியன் திரைப்படத் திருவிழா ஒருங்கிணைக்கப்படுகின்றது.
ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதிகள் குழு மற்றும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின் தூதரகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புக் கூட்டிணைவோடு இந்த திருவிழா நடத்தப்பட உள்ளது.