2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கான நாசாவின் அடுத்த திட்டத்திற்குத் தயார் செய்வதற்கான பகுதியாக ஐஸ்லாந்தில் உள்ள லம்பாஹ்ரூன் லாவா என்ற பகுதியை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.
அறிவியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, வடக்கு அட்லாண்டிக்கின் மையத்தில் அமைந்துள்ள எரிமலைத் தீவான ஐஸ்லாந்தானது பல வழிகளில் செவ்வாய்க் கிரகத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றது.
அடுத்ததாக செயல்படுத்தப் படவிருக்கும் நாசாவின் செவ்வாய் கிரக இயந்திரவியல் (ரோபோட்டிக்) விண்வெளி ஆய்வுத் திட்டமானது ஐஸ்லாந்தின் கறுப்பு பசால்ட் மண்ணின் மீது பயிற்சி அளிக்கப்பட விருக்கின்றது.