TNPSC Thervupettagam

ஒடிசா - சமூகப் பதிவு

November 3 , 2019 1724 days 536 0
  • அனைத்து நலத் திட்டங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட குடும்ப விவரங்களின் ‘ஒற்றை மூலத்தை’ உருவாக்க, ஒடிசா மாநில அரசு ஒரு சமூகப் பதிவேட்டைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
  • அம்மாநில அரசானது புதிய திட்டத்தை வகுக்கவும் பயனாளியை இலக்காகக் கொள்ளவும் குடிமகனின் சமூக - பொருளாதாரத் தரவை அணுகுவதன் மூலம் சிறந்த பயனாளிகளை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் பதிவகமானது இலக்காக உள்ள பயனாளிகளை அடையாளம் கண்டு, போலியான மற்றும் தகுதியற்றப் பயனாளிகளை களையெடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
  • விவசாயிகளுக்கான அம்மாநிலத்தின் முதன்மைத் திட்டமான ‘கலியா’ என்ற  திட்டத்தின் கீழ் சமீபத்தில் 3.41 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு 170 கோடி மானியம் வழங்கப் பட்டதால் இந்த நடவடிக்கை தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்