TNPSC Thervupettagam

ஒடிசா தினம் - ஏப்ரல் 01

April 2 , 2022 878 days 396 0
  • இது உட்கல் திவாஸ் அல்லது உட்கலா திபாஷா என்று அழைக்கப்படுகிறது.
  • ஒரு சுதந்திர மாநிலமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு போராட்டத்திற்குப் பிறகு ஒடிசா மாநிலம் உருவானதை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 01 ஆம் தேதியன்று இத்தினமானது கொண்டாடப்படுகிறது.
  • இந்தப் புதிய மாகாணம் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • இந்த மாநிலம் ஆனது முதலில் ஒரிசா என்றே அழைக்கப்பட்டது.
  • ஆனால்  2011 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில், நாடாளுமன்றத்தில் ஒரிசா மசோதா நிறைவேற்றப் பட்டு ஒடிசா என அது பெயர் மாற்றப்பட்டது.
  • ஒடிசாவின் முந்தையத் தலைநகரம் கட்டாக் ஆகும்.
  • இம்மாநிலத்தின் தற்போதையத் தலைநகரம் புவனேஸ்வர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்