1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று, பிரிட்டிஷ் அரசாங்கம் ஆனது பீகார் மற்றும் ஒடிசா மாகாணத்திலிருந்து ஒடிசாவை அதிகாரப் பூர்வமாகப் பிரித்து, அதற்கு தன்னாட்சி நிர்வாக அந்தஸ்தை வழங்கியது.
அப்போது பீகார் மற்றும் ஜார்க்கண்டுடன் சேர்ந்து ஒடிசா, வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ஒடிசாவின் மொழியியல் மற்றும் பன்முகக் கலாச்சார அடையாளத்தைப் பெருமளவு பாதுகாக்கும் விருப்பத்திலிருந்து தனி மாநிலத்திற்கான கோரிக்கை உருவானது.
மதுசூதன் தாஸ், உத்கல்மணி கோப பந்து தாஸ் மற்றும் ஃபக்கீர் மோகன் சேனாபதி ஆகியோர் இந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக இருந்தனர்.