TNPSC Thervupettagam

ஒடிசாவின் கடலோர பேரிடர் எச்சரிக்கை அமைப்பு

November 3 , 2018 2087 days 585 0
  • இந்தியாவில் முதன்முறையாக முன்னெச்சரிக்கை தகவல் பரப்பு மையத்தை ஒடிசா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது அபாயச் சங்கு கோபுரத்தின் மூலம் புயல் மற்றும் சுனாமி குறித்து ஒரே நேரத்தில் கடற்கரையோரத்தில் வசிப்பவர்களுக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும்.
  • 480 கி.மீ. கடல் எல்லை கொண்ட ஒடிசா மாநிலத்தில் 122 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புவனேஸ்வரில் உள்ள மாநில அவசர மையத்தில் பொத்தானை அழுத்தியவுடன் இந்த 122 கோபுரங்களிலும் அபாயச் சங்கு ஒலிக்கும்.
  • இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் கூட்டு முயற்சியாகும். இது உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்