TNPSC Thervupettagam

ஒடிசாவின் பழங்குடியினர் பற்றிய கலைக் களஞ்சியம்

October 3 , 2022 657 days 336 0
  • ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் ஒடிசாவின் பழங்குடியினர் பற்றிய கலைக் களஞ்சியத்தை வெளியிட்டார்.
  • இது ஐந்து தொகுதிகளைக் கொண்டுள்ளது
  • பழங்குடிச் சமூகங்கள் பற்றிய கலைக்களஞ்சியத்தைத் தொடங்கி அவர்களின் வரலாறு மற்றும் தனித்துவமான பாரம்பரியங்களை ஆவணப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது.
  • இந்த கலைக்களஞ்சியமானது பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCSTRTI) மற்றும் ஒடிசா மாநிலப் பழங்குடியினர் அருங்காட்சியகம் ஆகியவற்றினால் வெளியிடப்பட்டது.
  • ஓடிஸா மாநிலத்தில் வேகமாக மாறி வரும் பழங்குடிச் சமூகங்களின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதே இந்நூலின் நோக்கமாகும்.
  • ஒடிசாவின் மொத்த மக்கள்தொகையில் 22.85 சதவிகிதம் பழங்குடியினர் என்பதோடு அம்மாநிலத்தில் 62 வகை பழங்குடியினர் வசிக்கின்றனர்.
  • இந்த மாநிலமானது, இந்தியாவிலேயே பல்வேறு வகையான பழங்குடி சமூகங்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்