TNPSC Thervupettagam

ஒடிசாவிற்கான கும்கி யானைகள்

January 27 , 2024 335 days 294 0
  • தென் மாநிலத்தின் வெற்றிகரமான திட்டத்தைக் கருத்தில் கொண்டு, ஒடிசா அரசானது தமிழ்நாட்டினைச் சேர்ந்த நான்கு கும்கி யானைகளையும், அவற்றிற்கான யானைப் பாகன்களையும் அனுப்புமாறு கோரியுள்ளது.
  • ஒடிசாவில், இந்த நிதியாண்டில் (2023-24) மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே 230 மோதல்கள் நடந்துள்ளன.
  • இந்த மோதல்களில் 139 மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 108 பேர் காயம் அடைந்துள்ளனர்.
  • கடந்த நிதியாண்டில் 257 மோதல்களில் 146 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 157 பேர் காயமடைந்தனர்.
  • நடப்பு நிதியாண்டில் இன்னும் இரண்டு மாதங்கள் மீதம் உள்ளதால், யானைத் தாக்குதலால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கும்.
  • காட்டு யானைகளை முறையாக வழி நடத்தவும், அவற்றைக் காட்டிற்குள் விரட்டவும் உதவும் வகையில் கும்கி யானைகளை மூலோபாய முறையில் பயன்படுத்தி, பயிர் மற்றும் மனித வாழ்விடங்களின் சேதங்கள் மற்றும் மனிதர்கள் & யானைகள் இடையேயான மோதலால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்கலாம்.
  • இந்த யானைகளை வன ரோந்துப் பணி மற்றும் மீட்பு பணிகளுக்கும் ஈடுபடுத்தலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்