TNPSC Thervupettagam

ஒடிசாவில் நிழல் அமைச்சரவை

July 24 , 2024 40 days 193 0
  • நவீன் பட்நாயக், ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் முதல்வர் மோகன் மாஜி குறித்த ஒரு மதிப்பாய்வினை மேற்கொண்டு, அவரை எதிர்கொள்வதற்காக 50 பேர் கொண்ட நிழல் அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்.
  • நிழல் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பெரும்பாலும் அவரது அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆகப் பணியாற்றியவர்கள் ஆவர்.
  • அவர்கள் ஒவ்வொரு அமைச்சரையும் அவரது துறையையும் கண்காணித்து, மாநில அரசாங்கம் சரியான தீர்வுகளை கொண்டு வராத பிரிவுகளில் அதற்கான மாற்றுத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளைத் தயாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • எதிர்க் கட்சியானது மக்கள் நலன்களின் பாதுகாவலர் என்று கருதப்படுகிறது.
  • ஒரு மாநிலச் சட்டசபையில் எதிர்க்கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்கப் பங்கு உள்ளது.
  • சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகளை மிக உன்னிப்பாகக் கண்காணித்து, மாநிலச் சட்டசபையில் அந்தத் துறைகள் குறித்த விவாதத்தின் போது திறன் மிக்க முறையில் ஈடுபடுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்