ஒடிசாவில் மெலியோடோசிஸ் பாதிப்பு குறித்த தகவல்களை சேகரிக்கும் நிகழ்வானது தொற்றுகள் பருவகாலமாக ஏற்படுகின்றன என்பதையும், மிக அதிக மழைப்பொழிவு, அதிக ஈரப்பதம், அதிக மேகமூட்டம் மற்றும் குறைந்த சூரிய ஒளி போன்ற பல்வேறு சூழ்நிலைகளின் போது அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
மெலியோடோசிஸை 'சுற்றுச்சூழலால் தோன்றும் தொற்று நோயாக' கருதலாம்.
இது பர்கோல்டேரியா சூடோமல்லே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் அதிகரித்து வரும் வெப்ப மண்டல நோயாகும்.
இது உலகளவில் பரவி வரும் ஓர் அரிய நோயாகும் என்பதோடு மேலும் இந்தியா உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இது காணப் படுகிறது.