உத்கல் திவாஸ் (Utkal Divas) எனப்படும் ஒடிஸா தினம் ஆண்டு தோறும் ஒடிஸா மாநிலம் முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது.
1936 ஆம் ஆண்டு ஒடிஸா மாநிலமானது ஒருங்கிணைந்த பெங்கால்-பீகார் – ஒரிஸா மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக (combined Bengal-Bihar-Orissa province) உருவாக்கப்பட்டதை நினைவு கூர்வதற்காக இத்தினம் ஒடிஸா மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
1568-ஆம் ஆண்டு ஒடிஸாவின் கடைசி இந்து அரசரான முகுந்த தேவினுடைய தோல்வி மற்றும் இறப்பிற்குப் பிறகு ஒடிஸா தனது முழு அரசியல் அடையாளத்தையும் இழந்தது. பின் இது பல்வேறு ஆண்டுகளாக வங்காள மாகாணத்திற்குட்பட்ட பகுதியாக இருந்து வந்தது.
பின் ஒடிஸா மாநிலமானது ஏப்ரல் 1, 1936 ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஓர் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
மதுசுதன் தாஸ், கோபபந்துதாஸ், மகாராஜா கீரூஷ சந்திர கஜபதி, பகிர் மோகன் சேனாபதி, கௌரி ஷங்கர் ரே போன்ற பல தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மொழி அடிப்படையில் ஒடிஸாவைத் தனி மாநிலமாக உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.