TNPSC Thervupettagam

ஒட்டகச்சிவிங்கி பற்றிய மரபியல் ஆய்வு

October 25 , 2022 635 days 306 0
  • கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள ஒட்டகச்சிவிங்கிகள் பெரும்பாலும் நுபியன் ஒட்டகச்சிவிங்கிகள் அல்லது ரோத்ஸ்சைல்ட் ரக ஒட்டகச் சிவிங்கிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • இந்தியாவின் வடக்கத்திய ஒட்டகச்சிவிங்கி இனங்களின் (29 ஒட்டகச் சிவிங்கிகள்) மிகப் பெரியக் கூட்டமானது கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ளது.
  • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் காலனித்துவ வாதிகள் ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற காலனித்துவப் பகுதிகளிலிருந்து வடக்கத்திய ஒட்டகச் சிவிங்கிகளைக் கொண்டு வந்தனர்.
  • நுபியன் ஒட்டகச்சிவிங்கியானது, ஒட்டகச்சிவிங்கிகளின் ஒரு கிளையினமாகும்.
  • இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்பட்டது.
  • இருப்பினும், நுபியன் ஒட்டகச்சிவிங்கிகளின் 95% எண்ணிக்கையானது கடந்த 30 ஆண்டுகளில் குறைந்துள்ளது.
  • ரோத்ஸ்சைல்ட்ஸ் ஒட்டகச் சிவிங்கியானது, 6 மீ உயரம் வரை வளரக்கூடிய மிக உயரமான கிளை உயிரினங்களில் ஒன்றாகும்.
  • மற்ற ஒட்டகச்சிவிங்கிகளுடன் ஒப்பிடும்போது அதன் நிறம் தனித்துவமானது,  ஏனெனில் அவற்றின் உடல் அடையாளக் குறியீடுகள் அவற்றின் கால்களில் பாதி வரை மட்டுமே காணப்படும்.
  • நுபியன் மற்றும் ரோத்ஸ்சைல்ட் ஒட்டகச்சிவிங்கிகள் IUCN அமைப்பினால் 'மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவை' மற்றும் 'ஆபத்தான நிலையில் உள்ள உயிரினம்' என பட்டியலிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்