போலந்து மற்றும் லிதுவேனியா, லாத்வியா மற்றும் எஸ்டோனியா போன்ற பால்டிக் நாடுகள் ஒட்டாவா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறத் தயாராகி வருகின்றன.
கண்ணி வெடி தடை ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படும் ஒட்டாவா ஒப்பந்தம் ஆனது 1997 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
இது உலகளவில் மனிதர்களைத் தாக்குவதை இலக்காகக் கொண்ட, மனிதர்களுக்கு எதிரான கண்ணிவெடிகளின் பயன்பாட்டினைத் தடை செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் 160 க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன.
ஆனால் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில முக்கிய இராணுவ வலிமை நிறைந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை.
2005 ஆம் ஆண்டில் அனைத்து பால்டிக் நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டன என்பதோடு போலந்து 2012 ஆம் ஆண்டில் இதில் இணைந்தது.
உக்ரைன் நாடானது ஒட்டாவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், ரஷ்யாவின் தாக்குதலின் போது அமெரிக்காவிடமிருந்து கண்ணிவெடிகளைப் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் 20வது பிரிவானது, தற்போது போரில் ஈடுபட்டிருந்தால் ஒரு நாடு ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது என்று குறிப்பிட்டுக் கூறுகிறது.
உக்ரைன் நாடு தற்போது உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கண்ணி வெடிகள் பயன்படுத்தப்பட்ட நாடு ஆக ஐக்கிய நாடுகள் சபையினால் மதிப்பிடப்பட்டுள்ளது.