TNPSC Thervupettagam

ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இணைய சங்கேதச் சொத்து அறிக்கை கட்டமைப்பு

October 23 , 2022 636 days 369 0
  • ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, ஒரு புதிய இணைய சங்கேத-சொத்து அறிக்கைக் கட்டமைப்பை (CARF) அறிவித்துள்ளது.
  • ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டமைப்பானது இணைய சங்கேத-சொத்துக்கள் தொடர்பான தகவல்களைப் புகாரளிப்பதற்கும் பரிமாற்றம் செய்வதற்கும் வசதிகளை வழங்குகிறது.
  • G20 அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களிடம் இந்தக் கட்டமைப்புகள் வழங்கப் படும்.
  • இணைய சங்கேத-சொத்துக்கள் G20 அமைப்பின் பொதுவான அறிக்கையிடல் தரத்தினால் (CRS) முழுமையாக உள்ளடக்கப் படவில்லை என்பதோடு வரி ஏய்ப்பு அபாயத்தையும் இது அதிகரிக்கிறது.
  • இணைய சங்கேத-சொத்துக்களை, எந்த ஒரு மத்திய நிர்வாகியிடமும் அதன் பரிமாற்றம் மற்றும் பரிவர்த்தனைகள்/உடமைகள் பற்றிய முழு விவரத்தினைப் பற்றி தெரியப் படுத்தாமலும் வைத்திருக்க இயலும்.
  • இணைய சங்கேதப் பணச் சந்தையானது, இணைய சங்கேத-சொத்துப் பரிமாற்றங்கள் மற்றும் பல்வேறு முறைப்படுத்தப்படாத பணத்தொகுப்பு வழங்குநர்கள் சந்தையில் இடம் பெறுவதற்கு வழி வகுத்தது.
  • இந்தக் கட்டமைப்பானது உள்நாட்டுச் சட்டமாக மாற்றக் கூடிய வகையிலான மாதிரி விதிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்