TNPSC Thervupettagam

ஒன் மோர் ஆர்பிட் – உலகைச் சுற்றும் பயணம்

July 15 , 2019 1866 days 664 0
  • ஆக்சன் ஏவியேசன் நிறுவனத்தின் தலைவரான ஹமிஷ் ஹார்டிங் மற்றும் விண்வெளி வீரரான டெர்ரி விர்ட்ஸ் தலைமையிலான “ஒன் மோர் ஆர்பிட்” குழுவானது ஜூலை 11 அன்று உலகை வலம் வந்து முடித்துள்ளது.
  • இந்தப் பயணமானது அப்பல்லோ 11 விண்கலம் சந்திரனில் தலையிறங்கிய 50வது ஆண்டு நிறைவையும் 1519 ஆம் ஆண்டில் பெர்டினாண்ட் மெகல்லனால் முதல் உலகச் சுற்றுப் பயணம் தொடங்கப்பட்ட நாளின் 500வது வருடத்தையும் குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
  • இது அதிவேக தொலைதூர சொகுசு விமானமான கல்ஃப் ஸ்ட்ரீம் G 650ER (Gulf stream G650ER) என்ற விமானத்தால் முடிக்கப்பட்டது.
  • இது கஜகஸ்தான், மொரிஷியஸ், சிலி ஆகிய நாடுகளில் பழுது நீக்கம் மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டது.
  • ரஷ்யாவின் விண்வெளி வீரரான ஜென்னடி படல்கா இந்த 8 பேர் கொண்ட குழுவில் ஒருவராவார்.
  • இவர் 879 நாட்களை மொத்தமாக விண்வெளியில் கழித்து உலக சாதனைப் படைத்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்