TNPSC Thervupettagam

ஒப்பந்தப் பண்ணையம் மீதான சட்டம் - முதலாவது மாநிலம்

October 29 , 2019 1910 days 771 0
  • ஒப்பந்தப் பண்ணையம் மீதான சட்டத்தை இயற்றிய நாட்டின் முதலாவது மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.
  • வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் & சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) மீதான சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை வழங்கினார்.
  • இந்தச் சட்டமானது பெரு விளைச்சல் காலங்களில் அல்லது சந்தை விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் காலங்களில் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க இருக்கின்றது.
  • விவசாயிகளிடமிருந்து விவசாய விளைபொருள்களை வாங்குபவர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் சமயத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையே (pre-determined price) விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இச்சட்டத்தைச்  செயல்படுத்தும் ஆணையம்

  • தமிழ்நாடு மாநில ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) ஆணையம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு.
  • ஒப்பந்தங்கள் வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறையைச் சேர்ந்த “நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம்” பதிவு செய்யப்பட வேண்டும்.
விதிவிலக்கு
  • மத்திய அரசு, மாநில அரசு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சி ஆணையம் ஆகியவற்றால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விளைபொருளும் இந்த ஒப்பந்தப் பண்ணையத்தின் கீழ் உள்ளடங்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்