TNPSC Thervupettagam

ஒமிக்ரான் தடுப்பூசிக்கு ஒப்புதல்

August 19 , 2022 703 days 465 0
  • ஒமிக்ரான் மாற்றுருவினை எதிர்கொள்ளும் கோவிட்-19 தடுப்பூசியை அங்கீகரிக்கும் முதல் நாடாக பிரிட்டன் மாறியுள்ளது.
  • வயது வந்தோருக்கான ஊக்கியாக மாடர்னா நிறுவனம் தயாரித்த 'ஈரிணைத் திறன் கொண்ட' தடுப்பூசியை இங்கிலாந்து மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் அங்கீகரித்து உள்ளது.
  • இந்த தடுப்பூசி ஆனது ஓமைக்ரான் (BA.1) மற்றும் 2020 ஆம் ஆண்டில் பரவிய வைரஸ் ஆகிய இரண்டிற்கும் எதிராக "ஒரு வலுவான நோயெதிர்ப்புத் திறனை" தூண்டுகிறது.
  • இது தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் ஓமைக்ரான் மாற்றுருவின் பிற துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றிற்கு எதிராக ஒரு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்