TNPSC Thervupettagam

ஒராங்குட்டான் யுக்தி

May 17 , 2024 191 days 237 0
  • மலேசியா தனது பாமாயிலை வாங்கும் வெளிநாடுகளுக்கு ஒராங்குட்டான்களை பரிசாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது என்ற நிலையில் இது "ஒராங்குட்டான் இராஜதந்திரம்/ யுக்தி " என்று அழைக்கப்படுகிறது.
  • இந்தத் திட்டமானது சீனாவின் உலகப் புகழ்பெற்ற "பாண்டா ராஜதந்திரத்தை" நன்கு பிரதிபலிக்கிறது.
  • தென்கிழக்கு ஆசியாவில் காடுகளை அழிப்பதற்கும், ஒராங்குட்டான் வாழ்விடங்களை அழித்ததற்கும் பாமாயில் தொழில் காரணமென்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • பனை எண்ணெய் உற்பத்திக்காக மலேசியா சமீபத்தியத் தசாப்தங்களில் மில்லியன் கணக்கான ஹெக்டேர் காடுகளை இழந்துள்ளது.
  • சீனாவின் இந்தத் திட்டமானது, பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்க பாண்டாக்களை வழங்குவதை உள்ளடக்கியதாகும்.
  • ஆனால் ஒராங்குட்டான் யுக்தி மக்கள் தொடர்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
  • போர்னியன், சுமத்ரான் மற்றும் தபனுலி என ஒராங்குட்டான்களில் மூன்று வகைகள் உள்ளன.
  • உலக வனவிலங்கு நிதியத்தால் (WWF) போர்னியன் ஒராங்குட்டான்கள் அருகி வரும் வரும் நிலையில் உள்ளவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • சுமத்ரா மற்றும் தபனுலி ஆகிய இனங்கள் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ளதாக பட்டியலிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்