துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் 90 மில்லியன் பயணிகளுக்கு அனைத்து சேவைகளையும் ஒரே குடையின் கீழ் வழங்கும் திறனுடைய உலகின் மிகப்பெரிய விமான நிலைய முனையம் திறக்கப்பட்டது.
இந்த புதிய விமான நிலையம் இஸ்தான்புல்லின் ஐரோப்பியப் பகுதியோரம் உள்ள கருங்கடல் கரையோரத்தின் அருகில் அமைந்திருக்கின்றது.
இது இஸ்தான்புல் புதிய விமான நிலையத் திட்டத்தின் பகுதி 1A என்ற பகுதியின் கீழ் ஒரு பிரிவாக கட்டப்பட்டிருக்கின்றது.
இது அரசு தனியார் பங்களிப்பு (PPP) மாதிரியில் IGA என்ற நிறுவனங்களின் கூட்டமைப்பில் கட்டப்பட்டிருக்கின்றது.