TNPSC Thervupettagam

ஒரு சுகாதாரம் மற்றும் ஒரு பருவநிலை மையம் – தமிழ்நாடு

November 28 , 2024 46 days 126 0
  • சுகாதாரத் துறையின் கீழ் ‘ஒரு சுகாதாரம் மற்றும் ஒரு பருவநிலை மையத்தினை’ அமைப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • இது பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் அதிகரித்து வரும் வெப்பநிலை, காரணி மூலம் நோய் பரவல் அதிகரித்தல், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் மற்றும் கடலோரப் பாதிப்பு போன்றப் பிராந்தியம் சார்ந்த சவால்களை எதிர் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மையம் ஆனது, பருவநிலை சூழ்நிலைகளின் அடிப்படையில் நோய்ப் பாதிப்பு போக்குகளைக் கணிப்பதற்காக வேண்டி செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாதிரிகளை உருவாக்கும்.
  • இது பாதிக்கப்படக்கூடியச் சமூகங்களை மையமாகக் கொண்டு, பருவநிலையினால் ஏற்படக்கூடிய நோய்களை கண்காணிக்க மாநில அளவிலான ஒரு தரவுத் தளத்தினை உருவாக்கி புதுப்பிக்கும்.
  • இது சுகாதார அபாயங்கள் மற்றும் நோய்களை ஆய்வு செய்வதற்காக என்று விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்