தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அக்டோபர் 01 அன்று தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் “ஒரு தேசம், ஒரு குடும்ப அட்டை” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்தப் படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலிருந்து முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் இதர மாநிலங்களுக்குச் சென்றிருந்தாலும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 என்பதின் கீழ் உயிர்த் தரவு அங்கீகாரத்தின் மூலம் மாதாந்திரப் பொருட்களைப் பெற முடியும்.
மேலும், இந்த அட்டைகளை வைத்துள்ள மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள் உயிர்த் தரவு சரிபார்ப்பிற்குப் பின்னர் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் பொருட்களைப் பெற முடியும்.
தங்களத மாதாந்திரப் பொருட்களைப் பெற முடியாத முதியவர்கள் மற்றும் உடல் நலக் குறைவுள்ளவர்கள் தங்கள் சார்பாக ஒரு நபரை நியமித்து, அவரின் மூலம் மாதாந்திரப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.