TNPSC Thervupettagam

ஒரு நாள் அளவிலான கடன் பெறுவதற்கான ரூபாய் வீதம்

December 13 , 2024 9 days 54 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, மிக பாதுகாப்பான பணச் சந்தைகளின் அடிப்படையில், பாதுகாப்பான ஒருநாள் நிறைவு காலம் கொண்ட நிதிகளை வாங்குவதற்கான/ கடன் பெறுவதற்கான ரூபாய் விகிதத்தை (SORR) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
  • நம் நாட்டில் ரூபாய் வட்டி விகித அளவுருக்களை மதிப்பாய்வு செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கி MIBOR அளவுருக்கள் குழுவை அமைத்துள்ளது.
  • SORR என்பது மிக பாதுகாப்பான பணச் சந்தைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு அளவுருவாகும்.
  • இது சந்தை ரெப்போ மற்றும் இடைநிலை ரெப்போ ஒப்பந்தம் அல்லது TREP ஆகிய பிரிவுகளில் மிக பாதுகாப்பானப் பணச் சந்தை பரிவர்த்தனைகளின் அடிப்படையில் அமையும்.
  • SORR ஆனது வெறும் இடைநிலை தரகு அமைப்புகளுக்கு விதிக்கப்படும் ஒரு கட்டண விகிதத்தைக் காட்டிலும் ஒரு நாள் / குறுகிய நிறைவு காலம் கொண்ட சந்தை நிதி விகிதத்தினைச் சார்ந்ததாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்