TNPSC Thervupettagam

ஒரு பரிமாண புழுத்துளை அளவிலான அரிமானம்

March 4 , 2023 505 days 245 0
  • ஒரு பரிமாண புழுத்துளை அளவிலான அரிமானம் எனப்படும் அரிமானத்தின் புதிய வடிவத்தை அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
  • ஒரு பரிமாண புழுத்துளை அளவிலான அரிமானம் என்பது நிக்கல்-குரோமியம் கலவையானது, உருகிய ஃபுளூரைடு கரைசலுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிகமாக ஏற்படுகின்ற, ஊடுருவும் வகையிலான அரிமானம் ஆகும்.
  • இந்த வகை அரிமானமானது மூலக்கூறுகளின் வழித்தட அமைப்புகளில் ஊடுருவல் வலையமைப்பு உருவாவதற்கு வழி வகுக்கின்றது.
  • இந்த வழித்தடங்களில் உருகிய கரைமங்கள் நிரப்பப்பட்டு, மூலக்கூறுகளின் அமைப்புகளில் வெற்றிடங்களை உருவாக்குகின்றன.
  • உருகிய உப்புக் கரைசல்களில் சூழல் அமைப்புகளில் பொருள் சிதைவுச் செயல் முறைகளைப் புரிந்து கொள்வதில் இது முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளது.
  • அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த அணுமின் நிலையங்களில் பயன் படுத்தப் படும் குளிரூட்டிகளுக்கு உருகிய உப்புக் கரைசல்கள் ஒரு முக்கிய மாற்றாக உள்ளன.
  • இவை அதிக வெப்பக் கடத்துத்திறன் மற்றும் அதிக கொதிநிலையைக் கொண்டு உள்ளதால், உருகிய உப்புக் கரைசல்கள் குளிரூட்டிகளாக பயன்படுத்துவது மிகவும் ஈர்ப்பு மிக்கப் பயன்பாடாக உள்ளது.
  • இது அணு உலையின் மையப் பகுயிலிருந்து வெப்பத்தை வெளியேற்றுவதற்கும், மின்சார உற்பத்திக்கும் சிறந்தப் பயன்பாடாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்