இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) 'ஒரு வாகனம், ஒரு FASTag' திட்டம் ஆனது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் செயல்படுத்தப் பட்டுள்ளது.
இந்தக் கருத்தாக்கமானது, பல வாகனங்களுக்கு ஒரு FASTag குறியீட்டினைப் பயன்படுத்துதல் அல்லது ஒரு வாகனத்துடன் தொடர்புடைய பல FASTags குறியீடுகளை இணைக்கும் நடைமுறையைத் தடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, வாகன உரிமையாளர் ஒரு வாகனத்திற்குச் செயலில் உள்ள ஒரு FASTag குறியீட்டினை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்.