TNPSC Thervupettagam

ஒரு வினாடிக்கும் குறைவான பிரகாசமான ஊடுகதிர் வெடிப்பு நிகழ்வுகள்

January 1 , 2024 329 days 325 0
  • ஆஸ்ட்ரோசாட் ஆய்வகமானது, அதி உயர் காந்தப்புலத்துடன் (காந்த விண்மீன்) கூடிய புதிய மற்றும் தனித்துவமான நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து பிரகாசமான ஒரு வினாடிக்கும் குறைவான பிரகாசமான ஊடுகதிர் வெடிப்பு நிகழ்வுகளை கண்டறிந்து உள்ளது.
  • இது காந்த விண்மீன்களின் அசாதாரணமான தீவிர வானியற்பியல் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 33 மில்லி விநாடிகள் என்ற சராசரி கால அளவுடன் கூடிய 67 குறுகிய ஊடுகதிர் வெடிப்பு நிகழ்வுகள் கண்டறியப்பட்டது முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
  • இந்த வெடிப்புகளில் பிரகாசமான ஒன்று சுமார் 90 மில்லி விநாடிகள் நீடித்தது.
  • ஆஸ்ட்ரோசாட் விண்வெளியில் அமைந்த இந்தியாவின் முதலாவது பல அலைநீள ஆய்வகமாகும்.
  • காந்த விண்மீன்கள் என்பது நிலப்பரப்பு சார்ந்த காந்தப் புலத்தை விட மிகவும் வலிமையான அதி உயர் காந்தப்புலம் கொண்ட நியூட்ரான் நட்சத்திரங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்