TNPSC Thervupettagam

ஒருங்கிணைக்கப்படாத துறைசார் நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு

December 28 , 2024 62 days 85 0
  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) ஆனது, ஒருங்கிணைக்கப் படாத துறை சார் நிறுவனங்களின் (ASUSE) கணக்கெடுப்பினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளது.
  • கடைசியாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆகிய காலக்கட்டத்திற்கு இடையில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
  • அடுத்தக் கணக்கெடுப்பு ஆனது, மாவட்ட வாரியான சில தரவுகளைச் சேகரிப்பதற்கு முயற்சிக்கும், மேலும் ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்கள் மாவட்டங்களில் உள்ள உள்ளூர் பொருளாதாரங்களை எவ்வாறு தூண்டுவிக்கின்றன என்பதைப் பற்றிய சில விவரங்களை வழங்க உதவும்.
  • கூடுதலாக, தேசிய மற்றும் மாநில அளவில் தற்போது கிடைக்கப் பெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளி விவரங்கள் ஆனது மாவட்ட அளவிலும் கிடைக்கப் பெறும் வகையில் வழி வகை செய்யப்படும்.
  • 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் அல்லது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத வேளாண்மை சாராத நிறுவனங்களே ஒருங்கிணைக்கப் படாத நிறுவனங்கள் ஆகும்.
  • முந்தையக் கணக்கெடுப்பில் 498,024 நிறுவனங்களின் தரவுகள் பதிவு செய்யப்பட்டது,  அதில் 273,085 நிறுவனங்கள் கிராமப்புறங்களிலிலும், 224,939 நிறுவனங்கள் நகர்ப் புறங்களிலிலும் இருந்தன.
  • இந்த வாரம் வெளியிடப்பட்ட இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள், முந்தைய ஆண்டில்  65.1 மில்லியனாக இருந்த ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் எண்ணிக்கை ஆனது 12.8% அதிகரித்து 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 73.4 மில்லியனாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
  • சேவைத் துறை மட்டுமே சுமார் 30.4 மில்லியன் நிறுவனங்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து வர்த்தகத் துறை 22.8 மில்லியன் பங்கினையும், உற்பத்தித் துறை 20.1 மில்லியன் பங்கினையும் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்