TNPSC Thervupettagam

ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு 2022-23

July 21 , 2024 5 hrs 0 min 29 0
  • 2021-22 ஆம் ஆண்டில் இத்துறையில் 5.97 கோடியாக இருந்த மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையானது, 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 6.50 கோடியாக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது 5.88% வருடாந்திர வளர்ச்சியைக் குறிக்கிறது.
  • இந்தத் துறையின் பொருளாதாரச் செயல்திறனின் முக்கிய குறிகாட்டியான மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) 9.83% வருடாந்திர வளர்ச்சி பதிவானது.
  • அக்டோபர் 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, ஒருங்கிணைக்கப்படாத வேளாண் சாராத துறையில் சுமார் 11 கோடி தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற நிலையில் இது 2021-22 ஆம் ஆண்டிற்கான ASUSE கணக்கெடுப்பில் 9.8 கோடியாக இருந்தது.
  • 2021-22 ஆம் ஆண்டு ASUSE கணக்கெடுப்பில் சுமார் 2,81,013 ரூபாயாக இருந்த ஒருங்கிணைக்கப் படாத வேளாண் சாராத நிறுவனத்திற்குச் சொந்தமான நிலையான சொத்துக்கள் ஆனது 2022-23 ஆம் ஆண்டு ASUSE கணக்கெடுப்பில் சராசரியாக 3,18,144 ரூபாயாக உயர்ந்தது.
  • தொழில் முனைவோர் நோக்கத்திற்கான இணையத்தின் பயன்பாடு ஆனது 7.2% அதிகரித்துள்ளது என்பது இந்தத் துறையில் ஏற்பட்ட மிகவும் விரைவான எண்ணிம மயமாக்கத்தினை குறிக்கிறது.
  • உற்பத்தித் துறையில் உள்ள தனியுரிம நிறுவனங்களில் சுமார் 54% ஆனது பெண் தொழில்முனைவோரால் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்