ஒருங்கிணைந்த ஈரநில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு 2025 – தமிழ்நாடு
March 12 , 2025 19 days 92 0
2025 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஈரநில வாழ் பறவைகள் கணக்கெடுப்பின் போது பல்வேறு ஈரநில வாழ் பறவை இனங்கள் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு 20 ஈரநிலப் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
வலசை போகும் பறவைகளைக் கண்காணித்தல், ஏரிகள், குளங்கள் மற்றும் இதர பிற நீர்நிலைகளில் பறவை வாழ்விடங்களை மதிப்பிடுதல் மற்றும் ஈரநிலப் பறவைகளின் பயனுள்ள மேலாண்மை மற்றும் வளங்காப்பினை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கவிநாடு குளம், ஆரியூர் குளம், அன்னவாசல் 'பெரிய குளம்' மற்றும் சிறுங்காகுளம் உள்ளிட்ட 25 ஈரநிலங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப் பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை உள்ளடக்கிய 10 சதுப்பு நிலங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 20 சதுப்பு நிலங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப் பட்டது.