அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்திற்குத் தகுதி பெற, அரசுப் பணியாளர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
ஓய்வூதியம் பெறுவோர், 25 ஆண்டுகளுக்கான குறைந்தபட்ச தகுதிச் சேவைக்காக, கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தினை தங்கள் ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
அரசு தனது பங்களிப்பினை 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
இந்தத் திட்டத்திற்கான பணியாளர்களின் பங்களிப்பு ஆனது அதிகரிக்காது.
ஓய்வூதியம் பெறுபவர் துரதிர்ஷ்டவசமாக மரணித்தால், அந்த ஊழியர் தாம் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தினை அவரது குடும்பம் பெறும்.
வயது முதிர்வு ஓய்விற்குப் பிறகு குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஓய்வூதியமாக மாதம் 10,000 ரூபாய் வழங்கப்படும்.
பணிக்கொடையோடு கூடுதலாக ஓய்வூதியத்தில் மொத்த தொகையும் வழங்கப்படும்.
தற்போதுள்ள NPS/VRS உடன் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் எதிர்கால ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) சேர விருப்பத் தெரிவு வழங்கப் படும்.