TNPSC Thervupettagam

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்

August 29 , 2024 89 days 132 0
  • அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டத்திற்குத் தகுதி பெற, அரசுப் பணியாளர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.
  • இத்திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
  • ஓய்வூதியம் பெறுவோர், 25 ஆண்டுகளுக்கான குறைந்தபட்ச தகுதிச் சேவைக்காக, கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தினை தங்கள் ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
  • அரசு தனது பங்களிப்பினை 14 சதவீதத்தில் இருந்து 18.5 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
  • இந்தத் திட்டத்திற்கான பணியாளர்களின் பங்களிப்பு ஆனது அதிகரிக்காது.
  • ஓய்வூதியம் பெறுபவர் துரதிர்ஷ்டவசமாக மரணித்தால், அந்த ஊழியர் தாம் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தினை அவரது குடும்பம் பெறும்.
  • வயது முதிர்வு ஓய்விற்குப் பிறகு குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ஓய்வூதியமாக மாதம் 10,000 ரூபாய் வழங்கப்படும்.
  • பணிக்கொடையோடு கூடுதலாக ஓய்வூதியத்தில் மொத்த தொகையும் வழங்கப்படும்.
  • தற்போதுள்ள NPS/VRS உடன் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் எதிர்கால ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) சேர விருப்பத் தெரிவு வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்